கொண்டாடும் ரசிகர்கள் - IMDB தரவரிசையில் முதலிடத்தை பிடித்த த்ருஷ்யம் 2..!
ஐ.எம்.டி.பி தரவரிசையில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 முதலிடத்தை பிடித்துள்ளது.
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் திரிஷ்யம். இதன் முதல்பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. முதல் பாகத்தின் வெற்றி எதிர்பார்ப்பில் இரண்டாம் பாகத்தின் மீது அதிகளவு எதிர்பார்ப்பை ரசிகர்களை வைத்திருந்தனர். இந்த நிலையில் சற்றும் குறை சொல்ல முடியாத தயாரிப்புடன் திருஷ்யம் 2 ம் பாகம் வெளிவந்தது. வெற்றியும் பெற்றது.
ஐ.எம்.டி.பி நிறுவனம் அவ்வப்போது அந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம், தற்போதைய ஐ.எம்.டி.பி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களை ஒப்பிடும்போது 8.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.