பரபரவென முடிந்த சிவகார்த்திகேயனின் #SK20 வியாபாரம்

Update: 2022-04-10 13:15 GMT

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.


 



சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டாக்டர்' படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து அடுத்தபடியாக 'டான்' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது இப்படத்தை 'ரெட் ஜெய்ன்ட் மூவிஸ்' உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.




 

இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமையை விநியோகஸ்தரான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து இப்படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News