வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இவர் தற்பொழுது "கூட்டத்தில் ஒருவன்" பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை அவரது ரசிகர்கள் பெருமளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.