20 வருடங்களில் சிறந்த கதை - விஜய் சீக்ரெட் கூறிய வம்சி

Update: 2022-01-24 11:45 GMT

"20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டிருக்கிறேன்" என நடிகர் விஜய் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியிடம் கூறியதாக பேட்டியளித்துள்ளார்.




 


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்தபடியாக தெலுங்கு மற்றும் தமிழில் தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் இணைந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். வரும் நாட்களில் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கப்போகும் இப்படத்தின் தகவல்கள் அவ்வபோது வந்த வண்ணம் இருந்தாலும் தற்பொழுது இதன் இயக்குனர் வம்சி கூறிய தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




 


நடிகர் விஜய், "கடந்த 20 ஆண்டுகளில நான் கேட்ட சிறந்த கதை இதுதான்" என கூறியதாக இயக்குனர் வம்சி கூறியுள்ளார். மேலும் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

Similar News