2022-ஆம் ஆண்டு முதல் ஹிட் - தமிழ் சினிமாவிற்கு 'வலிமை' சேர்த்த 'வலிமை'!
2022-ஆம் ஆண்டின் முதல் தமிழ் சினிமா ஹிட் படமாக அஜித்குமாரின் 'வலிமை' அமைந்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலை காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய காட்சிகள் அனுமதி என்பதன் காரணமாகவே கடந்த 2 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியான 24 படங்களில் வசூல் ரீதியாக எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதி தமிழக அரசால் திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டன.
இதனையடுத்து கடந்த வாரம் வியாழக்கிழமை ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து 'வலிமை' படம் வெளியானது. 'வலிமை' படம் வெளியான நான்கு நாட்களில் இதுவரை 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆண்டின் தமிழ் சினிமாவில் முதல் வசூல் சாதனை நிகழ்த்திய படம் 'வலிமை'.