வரும் பிப்ரவரி 27'ம் தேதி தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் கடந்த ஜனவரி மாதம் 23'ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலை நடத்துவது என இயக்குனர்கள் சங்கம் தீர்மானித்தது.
இந்நிலையில் இது குறித்து அறிவிப்பு ஒன்றை என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது, அதில் வரும் பிப்ரவரி 27'ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாகவும் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும் என்றும் அதன் பிறகு ஓட்டுக்கள் எண்ணப்படும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.