400 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆன 'கே.ஜி.எப் 2' - வசூலை வாரி குவிக்க வருகிறார் ராக்கி பாய்

Update: 2022-04-13 07:40 GMT

இதுவரை 'கே.ஜி.எப் 2' திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீணா டாண்டன் நடித்த படம் 'கே.ஜி.எஃப் 2'. பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படம் நாளை முழுவதும் உலகம் முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. கே.ஜி.எப் முதல் பாகம் பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றதால் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாது இந்தியா முழுவதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் 'கே.ஜி.எஃப் 2' படம் இன்னும் அதிகமாக வசூல் ஆகும் எனவும் தெரிகிறது.





சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் 'கே.ஜி.எப் 2' படத்தின் வியாபாரம் இதுவரை 400 கோடி அளவிற்கு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா வினியோக உரிமை மட்டும் 150 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாகவும், மேலும் கர்நாடகத்தில் உள்ள 900 திரையரங்குகளில் 550 திரையரங்குகளில் 'கே.ஜி.எப் 2' வெளியாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கில் 78 கோடியும், தமிழில் 40 கோடியும், ஹிந்தியில் 100 கோடியும் படம் வசூலை வெளியாகும் முன்னரே வாரி குவித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

Tags:    

Similar News