75 கோடி வசூல் சாதனையை துல்கர் சல்மானின் குருப் திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான் குருப் திரைப்படம் பான் இந்திய படமாக வெளியானதால் வெளியான ஐந்து நாட்களிலேயே 50 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியது.
இதனைதொடர்ந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது 75 கோடி வசூலித்துள்ளது. இதுவரை 35 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. துல்கரின் சினிமா பயணத்தில் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் வசூலில் இது மிகப்பெரிய சாதனை.