75'வது கேன்ஸ் திரைப்படவிழா - இந்திய நடச்சத்திரங்கள் அணிவகுப்பு
துவங்கியது கேன்ஸ் திரைப்பட விழா! மாதவன், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பு.
துவங்கியது கேன்ஸ் திரைப்பட விழா! மாதவன், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பு.
75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று துவங்கியது, 75வது விழா என்பதால் வழக்கத்தைவிட கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவின் போது விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு நாட்டிலும் தேசிய கொடி பிடித்து வள வருவது போன்று, பல்வேறு நாட்டைச் சேர்ந்த கலைஞர்களும் தனித்தனியாக ரெட் கார்பெட் மீது அணிவகுத்து வந்தனர்.
அதன்படி இந்திய அணியில் நடிகைகள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மாதவன், பார்த்திபன், கமல்ஹாசன் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளனர்.