தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற '96' படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்படுகிறது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் '96'. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தற்பொழுது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதனை தனது சமூக வலைதள பதிவு வாயிலாக உறுதிப்படுத்தி உள்ள நடிகர் விஜய் சேதுபதி, இப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் கபூர் தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் மற்றும் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் அஜய் கபூர் தெரிவித்துள்ளார்