கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.2.5 கோடி நிதியுதவி.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகின்றனர்.
அதே போன்று தமிழகத்திலும் நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு நிவாரணம் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் அஜித்குமார் ரூ.2.5 கோடி நிதியுதவியை தமிழக அரசுக்கு அளித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.