என்ன 'தல' என்றோ.. பட்டப்பெயரை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித்குமார் கட்டளை!

நடிகர் அஜித்குமாரை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் கூட தல என்று அழைத்து வந்தனர். ஆனால் தற்போது அது போன்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று நடிகர் அஜித் கட்டளை போட்டுள்ளார்.

Update: 2021-12-01 10:40 GMT

நடிகர் அஜித்குமாரை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் கூட தல என்று அழைத்து வந்தனர். ஆனால் தற்போது அது போன்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று நடிகர் அஜித் கட்டளை போட்டுள்ளார்.


இது தொடர்பாக நடிகர் அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித்குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித்குமார் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: The Indian Express

Tags:    

Similar News