போலி ட்விட்டர் கணக்கு.. காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்ட நடிகர் சார்லி.!
தன்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சார்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் சார்லி சினிமாத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். இவர் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சார்லிதான் தொடங்கியுள்ளார் என்று அவரது ரசிகர்கள் பலர் பின் தொடர ஆரம்பித்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார். தனது பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சார்லி, ''தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நான் எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் கணக்கு வைக்கவில்லை. எனக்கு எந்த ஒரு சமூக வலைதளமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே எனது பெயரில் பின் தொடரும் ரசிகர்கள் அதில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரபல நடிகரின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ள சம்பவம் மற்ற நடிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் பெயர்களிலும் போலி கணக்கு தொடங்கி விடுவோர்களோ என அச்சத்தில் உள்ளனர்.