தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Update: 2021-06-01 06:35 GMT

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'ஜகமே தந்திரம்' ஆகும். இப்படத்தில் தனுஷ் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளார்கள். இதுவரை 3 பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.




 


இத்திரைப்படம் கடந்த 2020 மே 1 அன்று வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திட்டமிட்டப்படி படத்தை வெளியிட முடியவில்லை. தற்போதைய சூழலில் திரைப்படம் திரையரங்கில் வெளியிட முடியாது. தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் படத்தை ஜூன் 18 அன்று இணையதளமான நெட்பிளிக்ஸில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் யூடிப்பில் இன்று வெளியாகியுள்ளது. அதில் 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போது இருந்தே தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News