நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி.!
நடிகர் மன்சூர் அலிகான் அறுவை சிகிச்சை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் அறுவை சிகிச்சை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் என்றாலே சர்ச்சையான வகையில் ஏதாவது பேசி மாட்டிக்கொள்வார். சமீபத்தில் தடுப்பூசி குறித்து சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமீன் பெற்றார் என்பது தெரியும்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த மன்சூர் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.