நடிகர் ராமராஜன் உடல்நிலை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி!

நடிகர் ராமராஜன் கடந்த வருடம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தார். இதனால் அவரது உடல்நிலைக் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

Update: 2021-10-19 10:47 GMT

நடிகர் ராமராஜன் கடந்த வருடம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தார். இதனால் அவரது உடல்நிலைக் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமராஜன் உடல்நிலைக் குறித்து தற்போது பரவி வரும் வதந்திகளுக்கு அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நாயகன், கிராமத்து நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அளவிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ராமராஜன் விளங்கினார். இயக்குனராகவும், நடிகராகவும் திரைப்பட விநியோஸ்தர்களாகவும் விளங்கி வந்தார். மேலும், அரசியலிலும் எம்.பி.ஆனார். அதன் பின்னர் அதிமுகவில் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்.

மதுரையில் நடந்த ஒரு கார் விபத்தில் உயிர் பிழைத்ததே பெயிர விஷயம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சினிமா, மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். இதன் பின்னர் அவரது உடல்நிலைக் குறித்து வதந்திகள் பரவியது. இந்நிலையில், மீண்டும் உடல்நிலை குறித்து பரவும் செய்திக்கு ராமராஜன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில் ராமராஜன் பற்றி உண்மைக்கு மாறான தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதனை யாரும் நம்ப வேண்டாம். ராமராஜன் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

விரைவில் புதிய படங்களில் நடிகராக நடிப்பார். அவர் மீண்டும் ரசிகர்கள் முன்னர் தோன்றுவார். புதிய படத்திற்கான துவக்க விழாவிலும் கலந்து கொள்வார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Source: toptamilnews

Image Courtesy:The Hindu

https://www.toptamilnews.com/thamizhagam/actor-ramarajan-health-explanation-given-by-his-party/cid5559168.htm

Tags:    

Similar News