தடுப்பூசி செலுத்தியதால் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை: நடிகர் செந்தில்.!
நல்லதான் உள்ளேன். கொரோனா தொற்று ஏற்பட்டால் யாரும் பயப்பட தேவையில்லை. கொரோனா பரிசோதனை செய்து கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது உண்மைதான் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: "எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மைதான். யாரும் பயப்பட வேண்டாம். நல்லதான் உள்ளேன். கொரோனா தொற்று ஏற்பட்டால் யாரும் பயப்பட தேவையில்லை. கொரோனா பரிசோதனை செய்து கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும், மருத்துவர்கள் சொல்லும் மருந்து, மாத்தரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதேபோன்று நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். எனக்கு நாளை மீண்டும் பரிசோதனை செய்வார்கள். இதன் பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.