ரூ.20 கோடி வரி ஏய்ப்பில் சிக்கிய நடிகர் சோனு சூட்!

நடிகர் சோனு சூட் கொரோனா சமயங்களில் தனது சொத்துக்களை விற்று பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலான உதவிகளை செய்து வந்தார். இதனால் இவரது சேவைக்கு பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-09-18 12:55 GMT

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 20 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ள கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ள பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சோனு சூட் கொரோனா சமயங்களில் தனது சொத்துக்களை விற்று பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலான உதவிகளை செய்து வந்தார். இதனால் இவரது சேவைக்கு பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி மற்றும் குருகிராம் உள்ளிட்ட 6 இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் சோனு சூட் சுமார் 20 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அவர் போலியான நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி, கணக்கில் வராத சொத்தை சேர்த்து வைத்துள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிமீறலில் ஈடுபட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source:  News j

Image Courtesy:Business Standard


Tags:    

Similar News