ஜெயலலிதா போன்று தோற்றமளிக்க அமெரிக்கா சென்ற நடிகை கங்கனா.. வீடியோ வெளியீடு.!

ஜெயலலிதா போன்று தோற்றமளிக்க அமெரிக்கா சென்ற நடிகை கங்கனா.. வீடியோ வெளியீடு.!

Update: 2020-11-28 09:29 GMT

மும்பை பாந்திரா போலீஸ் விசாரணையினால் சில மாதம் தடைபட்டிருந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை கங்கனா.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் இந்தி சினிமா மட்டுமின்றி மகாராஷ்டிராவை அதிரவைத்த சமயத்தில் கங்கனா ரணாவத்தும் அவரது சகோதரியும் ரங்கோலி சந்தலும் தெரிவித்த கருத்துக்கள் சுஷாந்த் சிங் மரணத்தில் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.


எந்த ஒரு ஆதாரமின்றி குற்றங்களை சுமத்திய நீதிமன்றத்தோட நேரத்தை வீணடித்ததோடு அல்லாமல், நாட்டில் ஒரு அசாதாரண சூழலையும் ஏற்படுத்தி பதற்றத்தை உண்டாக்கியதால் நீதிமன்றமே தாமாக முன்வந்து பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்து வருகிறது. இப்படி பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வேறு யாரேனும் வழக்கு தொடர்ந்தாலும் அந்த வழக்கின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது நீதிமன்றம்.

அப்படித்தான் கங்கனாவுக்கு எதிராக சினிமா பிரமுகர் முனாவர் அலி, மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஸிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரணாவத் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்குமாறு பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கங்கனா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது பாந்திரா போலீஸ்.

தலைவி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது இப்படி ஒரு சிக்கல் உண்டானது. இந்நிலையில் கங்கனா விசாராணைக்காக செல்வதால் ஒருவாரத்துக்கான ஷூட்டிங் ஷெட்யூல் முழுவதும் கேன்சல் செய்யப்பட வேண்டியம் சூழல் ஏற்பட்டது. இப்போது விசாரணை முடிந்து விட்டதால் இறுதிகட்ட படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தோற்றத்தில் வருவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றாராம். அமெரிக்காவில் ஜேசன் காலின்ஸ் எனும் ஹாலிவுட் மேக்கப் மேனிடம் பிராஸ்தெடிக் மேக்கப் செய்து ஜெயலலிதா தோற்றத்திற்கு வந்தாராம் கங்கனா ரணாவத். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
 

Similar News