பிரபல இசையமைப்பாளர் இசையில் பாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.!
பிரபல இசையமைப்பாளர் இசையில் பாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் பல படங்களில் நடித்து விருதுகளை வென்றுள்ளார்.மேலும் அண்ணாத்த மற்றும் செல்வராகவனுடன் சாணிக்காகிதம் ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களிலும், நான்கு தெலுங்கு படங்களிலும், இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களை அடுத்து தெலுங்கு படமான 'ராங்டே' என்ற படத்தில் நடித்து வருகிறார். நிதின் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் வெங்கி இயக்கி வரும் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில்,புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
ராங்டே படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ஒரு பாடலை தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் பாடியுள்ளார். இப்பாடல் பாடும்போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#RangDe
— pcsreeramISC (@pcsreeram) February 4, 2021
Another video of Keerthi jamming at Devi’s studio .@dirvenky_atluri @ThisIsDSP @actor_nithiin @SitharaEnts @KeerthyOfficial pic.twitter.com/5lRwLDOWqn