'நடிகை மஞ்சுவாரியரை 4 நாட்களாக காணவில்லை' - பிரபல இயக்குனரின் பரபரப்பு புகார்

நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை அவர் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-02 12:15 GMT

நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை அவர் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பிரபல மலையாள இயக்குனரான சணல் குமார் தனது முகநூல் பக்கத்தில்' நடிகை மஞ்சு வாரியர் கந்துவட்டிக்காரர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. 4 நாட்கள் ஆகிறது ஆனால் இதுவரை மஞ்சு வாரியரை அவருக்கு நெருக்கமானவர்கள் இதுகுறித்து பதிலளிக்கவில்லை நடிகை மஞ்சுவாரியாரின் மௌனம் எனக்கு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது' என கூறியுள்ளார்.



மேலும் அவர் அந்த பதிவில், 'இந்த விவகாரம் குறித்து கேரள ஊடகங்கள் கண்டுகொள்ளாதது போல் நடிப்பது அச்சமாக உள்ளது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான பிரச்சினையாக இது இருப்பதனால் தேசிய ஊடகங்களும் இந்த விவகாரத்தில் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் விரும்புகிறேன்' என அதில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் மஞ்சுவாரியர் பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News