வவ்வால் போல தொங்கும் சமந்தா.. புகைப்படத்தை பார்த்து பதறும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு பின்னரும் பல்வேறு படங்களில் சமந்தா நடித்து வருகிறார். விஜய்சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்தார்.
நடிகை சமந்தா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். இதனிடையே தலைகீழாக தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமந்தா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஐதராபாத்தில் செட்டிலாகி விட்டனர்.
திருமணத்திற்கு பின்னரும் பல்வேறு படங்களில் சமந்தா நடித்து வருகிறார். விஜய்சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்தார். அந்த படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், உடலை மிகுந்த கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் சமந்தா. இதனிடையே அந்தரத்தில் தலைகீழாக வவ்வால் போன்று தொங்கும்படி உடற்பயிற்சி செய்துள்ளார். இந்த படத்தை இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.