'கோவிட் ஹெல்ப்லைன்' தொடங்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார்.!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுவதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘கோவிட் ஹெல்ப்லைன்’ மையத்தை துவங்கியுள்ளார். இதனை திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுவதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் 'கோவிட் ஹெல்ப்லைன்' மையத்தை துவங்கியுள்ளார். இதனை திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படுபவர்களுக்காக கடந்த 2017ம் ஆண்டு 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருகின்றார். இந்த அமைப்பானது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களுக்கு உதவுவது, தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது, மற்றும் உறுப்பு தானம் செய்வது போன்றவைகளை செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் என்பதால், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது நோயாளிகளுக்கு உதவுவதற்காக 'கோவிட் ஹெல்ப்லைன்' என்ற அமைப்பை தனது அம்மாவுடன் ஆரம்பித்துள்ளார்.
இந்த அமைப்பு, நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் சர்வீஸ் உள்ளிட்டவைகளை செய்து கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.