மாஸ்டர் பட நடிகை ட்வீட்டால் மோதிக்கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்கள்.!
மாஸ்டர் பட நடிகை ட்வீட்டால் மோதிக்கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்கள்.!;
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் தின விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் பல நல்ல கமெண்ட்களையும், விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் வெளியான 10 நாட்களில் 200 கோடிக்கு மேலும் வசூல் சாதனையை படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் அவரது டுவிட்டரில் கேட்ட கேள்வி ஒன்றால் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்டர் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி. இவர் நடித்த காட்சிகள் சினிமாவில் இருந்து நீக்கப்பட்டாலும்,டெலிட்டட் காட்சியில் அவர் நடித்த காட்சி வைரல் ஆனது.
அந்தவகையில் சுரேகா வாணி அவரது டுவிட்டரில் தளபதி விஜய்யின் சிறந்த ஆக்ஷன் படங்களை எனக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் சிறந்த ஆக்சன் படங்கள் என சுறா, புலி, பைரவா என்றும், இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் ஆஞ்சநேயா, அசல் போன்ற படங்களை பாருங்கள், அதுதான் சிறந்த ஆக்சன் படங்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர். இவர் கேட்ட கேள்வியினால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு ரசிகர் உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா தேவை இல்லாம ஃபேன்ஸ் வார் கிரியேட் பண்றதுக்கு இத கேக்க வேண்டியது ஏன் நீங்கல்லாம் வேற்று கிரகத்தவரா என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
Suggest me some action films of @actorvijay Sir 😊💥❤️
— Surekhavani (@SurekhaVaniOffl) February 15, 2021