இமாலய சாதனையில் அக்ஷய்குமாரின் 'பெல்பாட்டம்' ட்ரெய்லர் !

இமாலய சாதனையில் அக்ஷய்குமாரின் 'பெல்பாட்டம்' ட்ரெய்லர் !

Update: 2021-08-06 02:00 GMT

2021'ம் ஆண்டின் புதிய சாதனையை படைத்த அக்ஷய்குமாரின் 'பெல்பாட்டம்' ட்ரெய்லர்.




 


ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் அக்ஷய்குமார், ஹுமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பெல்பாட்டம்'. 1984ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு விமான கடத்தல் கதைதான் இப்படம்.




 


இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியானது. 24 மணி நேரத்தில் 2 கோடியே 32 லட்சம் பார்வைகளும் 4 லட்சத்திற்கு கூடுதலான லைக்குகளும் இந்த டிரைலருக்குக் கிடைத்துள்ளது. 2021'ம் வெளிவந்த திரைப்படங்களின் ட்ரெய்லர்களிலேயே 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ட்ரெய்லராக 'பெல்பாட்டம்' வலம் வருகிறது.


Souce - Dinamalar cinema

Similar News