சிவாஜியின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நடிகர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு நடிகர் தற்போது நடிக்க வந்துள்ளார்.

Update: 2022-05-23 08:18 GMT

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு நடிகர் தற்போது நடிக்க வந்துள்ளார்.




நடிகர் திலகம் சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார் இருவருமே நடிகர்கள். பிரபு, ராம்குமார் அவர்களின் மகன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகிய இருவருமே நடித்து வருகின்றனர். இந்நிலையில் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன் தற்போது நடிக்க வந்துள்ளார்.




புனேவில் தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டுள்ள தர்ஷன் விரைவில் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். இதற்கான அறிவிப்பு முறையாக வெளிவரும் எனவும் சிவாஜி குடும்பத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News