கன்பெக்சன் அறையில் கதறி அழுவும் அர்ச்சனா - நாமினேஷனை தடுக்கவா.?
கன்பெக்சன் அறையில் கதறி அழுவும் அர்ச்சனா - நாமினேஷனை தடுக்கவா.?;
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்கள் வரை கோழிப்பண்ணை டாஸ்க், லக்சரி பட்ஜெட் டாஸ்க் மட்டுமின்றி அதில் வெற்றி பெறும் ஒருவருக்கு ஸ்பெஷல் பவர் கிடைக்கும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
எனவே அந்த ஸ்பெஷல் பவரை பெற்று நாமினேஷன் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷத்துடன் விளையாடுகிறார்கள். இதனால் அனைத்து போட்டியாளர்களும் அவர்களது குரூப்பை விட்டு தனித்து விளையாடுகிறார்கள்.
இதனால் ஒருவருக்கொருவர் ஆவேசமாக விளையாடி வருவதால் மோதல் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவின் முட்டையை சோம் எடுத்த போது அந்த முட்டை உடைந்து விட்டதாக அர்ச்சனா குற்றம் சாட்டினார்.
ஆனால் சோம் தான் உடைக்கவில்லை என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி நிலையில் தற்போது அடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் அர்ச்சனா கன்பெக்சன் அறையில் பிக்பாஸிடம் குறை கூறி கதறி அழுகிறார்.
அவர் சோம் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கும் காட்சிகளும், சோகத்தோடு உட்கார்ந்து இருக்கும் காட்சிகளும் ஒரு கட்டத்தில் கன்பெக்சன் அறையில் கதறி அழும் காட்சிகளும் உள்ளன.இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஸ்பெஷல் பவரை பெறுவதற்காக அர்ச்சனா நாடகமாடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.இதுபற்றிய உண்மையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
#Day73 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/oOdo9x0hgy
— Vijay Television (@vijaytelevision) December 16, 2020