ஆரியை ஆதரிக்கும் பாலா: மீண்டும் எதிர்க்கும் ரம்யா.!

ஆரியை ஆதரிக்கும் பாலா: மீண்டும் எதிர்க்கும் ரம்யா.!

Update: 2021-01-07 17:58 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பலவிதமான ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்கள் அவர்களின் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்.எனவே 7-சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் சோம் மற்றும் ரியோ 32-புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள். அதனை அடுத்து பாலாஜி 30-புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் இந்த நிலையில் தற்போது 8-வது சுற்று நடைபெற்றுள்ளது. இதுதான் அனேகமாக இறுதிச்சுற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கியம் வரும் என்றும், அந்த வாக்கியம் யாருக்கு சரியாக பொருந்தும் என்று சொல்வதுதான் டாஸ்க் என்றும் அறிவிக்கப்படுகிறது. இதில் ரம்யாவுக்கு தேசத்தோடு ஒட்டி வாழ் என்ற வாக்கியம் வருவதை அடுத்து அவர் இதனை எதிர்பார்த்தபடி ஆரிக்கு சொல்கிறார்.

இந்த வீட்டில் எட்டு பேர் இருந்தாலும், அதில் ஏழு பேருடன் கருத்து வேறுபாடு அவருக்கு இருக்கிறது என்றும் அப்படி கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களோடு ஒட்டி வாழ்ந்து இருக்கலாம் என்றும் ஆனால் அவர் அதையும் செய்யவில்லை என்றும் கூறுகிறார்.இதை அடுத்து பாலாஜிக்கு துறந்து மறந்து வாழ் என்ற வாக்கியம் வருகிறது. அதனை அவரும் ஆரிக்கு கொடுக்கிறார்.

ஆரியின் விளையாட்டு முறை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்தாலும் உடனே அதனை அவர் மறந்துவிடுவார். இன்றைக்கு காலை சண்டை போட்டாலும் மாலையே அவர் உடனே அதை மறந்து என்னுடன் பேசுவார்.

அதாவது எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை மறந்துவிட்டு அவர் பேசுவார் என்று பாலாஜி அதற்கு விளக்கம் கொடுத்து ஆரிக்கு ஆதரவாக பேசினார்.ஆரியுடன் கிட்டத்தட்ட தினசரி சண்டை போட்ட பாலாஜியே அவருக்கு ஆதரவாக பேசி இருந்தும் ரம்யா தொடர்ந்து ஆரியின் எதிர்ப்பை காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதைப் பார்த்தால் இந்த வாரம் ரம்யா வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News