இயக்குனர் நெல்சன்திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடித்த 'பீஸ்ட்' படம் வரும் ஏப்ரல் 13'ம் தேதியன்று வெளிவரவிருக்கும் நிலையில், 'பீஸ்ட்' ட்ரெய்லர் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக பார்வையாளர்களை குறுகிய காலத்தில் பெற்றது.
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாலும் பெரிய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் குவைத் நாட்டில் 'பீஸ்ட்' படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதால் இந்த திரைப்படம் தமிழகத்தில் தடைவிதிக்க வேண்டுமென வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.