விரைவில் விஜய்'யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்துவரும் படம் 'பீஸ்ட்'. அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிக்கும் அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் 'பீஸ்ட்' முதல் சிங்கிள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.