பவானி தேவிக்கு தங்கத்தை பரிசளித்த சசிகுமார் !

Cinema News.

Update: 2021-09-09 11:00 GMT

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு தங்க சங்கிலி ஒன்றை பரிசளித்துள்ளார் நடிகர், இயக்குனர் சசிகுமார்.




 


டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி. இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், பவானி தேவியை சந்தித்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டி உள்ளார்.




 


இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

Tags:    

Similar News