அர்ச்சனா மற்றும் நிஷா தலையை பிடித்து அடித்துக்கொண்டனர் - என்ன ஆயிற்று.?

அர்ச்சனா மற்றும் நிஷா தலையை பிடித்து அடித்துக்கொண்டனர் - என்ன ஆயிற்று.?

Update: 2020-11-17 16:21 GMT

தமிழ் பிக்பாஸ் சீசன்-4 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டாஸ்க்குள் கடுமையாக இல்லை என போட்டியாளர்களும் யார் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கும் படியாக இல்லை என ரசிகர்கள் கருதுகிறார்கள். கொரோனாவால் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கவே இல்லை. தொடக்கத்திலிருந்தே சண்டைகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

அதில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளிவந்தது முதல் புரோமோவில்  போட்டியாளர்கள் 45 மணிநேரம் நடக்கும் மணி கூண்டு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.அதில் போட்டியாளர்கள் நேரத்தை சரியாக கணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேரத்தின் படியே குளிப்பது, சமைப்பது, தண்ணீர் என அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்று தெரிகிறது இதற்காக கடின உழைப்போடு  செயல்படுகிறார் என்பது போல ப்ரோமோ முடிந்தது.

அந்த வகையில் தற்போது வந்த இரண்டாவது புரோமோவில் நிஷாவின் ரகளை நடைபெறுகிறது. தண்ணீர் பிடிக்கும் சண்டையில் இருவரும் முடியை பிடித்து அடித்து கொள்கிறார்கள். இவர்களின் சண்டையை ரம்யா ஆச்சரியமாக பார்க்க, ரமேஷ்- அனிதா போன்றோர் சண்டையை தடுத்தும் இவருக்கு நடுவிலும் பேச்சுவார்த்தை நடைபெறுவது போல ப்ரோமோ முடிந்தது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் ரசிகர்களும் இன்று போட்டி கடுமையாக இருக்கும் போலவும் இதுபோல கஷ்டமான டாஸ்க்களை கொடுங்கள் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News