#BigBoss4 #Promo - பாலாஜியை தட்டி கேட்பாரா கமல்?
#BigBoss4 #Promo - பாலாஜியை தட்டி கேட்பாரா கமல்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருந்து கொண்டிருக்கும் வகையில் நேற்றைய நாளில் இருந்து பாலாஜியின் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஆரி மற்றும் பாலாஜி இடையே தொடர்ச்சியாக மோதல் வந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக பார்த்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பாலாஜியின் செயலை கண்டிக்கத்தக்க வகையில் இருக்கும் ஒரே நபரான கமல்ஹாசன் இன்று அவருக்கு கொஞ்சம் கண்டிப்புடன் கூடிய புத்திமதியை தெரிவிப்பார் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோன்றுதான் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் அன்பு குரூப்பை தட்டி கேட்பேன் என்று கமல் கூறினார். ஆனால் அவர் மென்மையாக அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் மட்டுமே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது தட்டிக் கேட்பேன் என்று கூறியதை சரியாக கமல் செய்ய வேண்டும் என்பதே அனைத்து பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது.மேலும் இன்றைய நாள் எப்படி இருக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு சில பார்வையாளர்கள் ஒருபடி மேலே போய் பாலாஜிக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் சட்டப்படி நடப்பது, நியாயமாக நடப்பது நேர்மையாக இருப்பது இதெல்லாம் சுவராசியம் அற்றது என்று நினைப்பதுதான் நியூ நார்மலாக இருக்கின்றது. என்னை பொருத்தவரை அது அப்நார்மல். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசுவதற்கு பெயர் ஸ்ட்ரெய்ட் பார்வர்டு கிடையாது, குரலை உயர்த்தி பேசினால் அது நியாயம் ஆகிவிடாது. அது முரட்டுத்தனம். தப்பு மேல தப்பு செய்து கொண்டிருப்பவர்களை என்ன செய்வது தட்டிக் கேட்போம் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.
இதேபோன்றுதான் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் அன்பு குரூப்பை தட்டி கேட்பேன் என்று கமல் கூறினார். ஆனால் அவர் மென்மையாக அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் மட்டுமே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது தட்டிக் கேட்பேன் என்று கூறியதை சரியாக கமல் செய்ய வேண்டும் என்பதே அனைத்து பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது.மேலும் இன்றைய நாள் எப்படி இருக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/sSlfcQa3wm
— Vijay Television (@vijaytelevision) January 2, 2021