மோகன்லாலை குத்துச்சண்டை வீரராக மாற்றும் பிரியதர்ஷன்
பிரியதர்ஷன் இயக்கத்தில் குத்துசண்டை வீரராக மோகன்லால்;
மலையாளத்தில் அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக பிரபல நடிகர் மோகன்லால் களம் காண உள்ளார்.
மலையாள உலகில் பிரியதர்ஷன் மற்றும் மோகன்லால் கூட்டணி வெற்றிக்கூட்டணி என அழைப்பார்கள். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 28 வெற்றி படங்களை தந்துள்ளனர். இவர்களிடமிருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட 'மரைக்காயர் அரபிக் கடலண்டே சிங்கம்' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் பக்கா கமர்ஷியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படம் குத்துசண்டை விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்படவுள்ளதாக இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒன்றி நடிக்கும் மோகன்லால் இதற்காக இப்பொழுதே பயிற்சியை துவங்கிவிட்டார்.