"ஆப்கான் மாப்பிளை வேண்டாம், இந்திய மாப்பிளைதான் வேண்டும்" - திருமணத்தை நிறுத்திய ஆப்கான் நடிகை

Breaking News.

Update: 2021-08-24 10:30 GMT

"ஓரு இந்தியரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என ஆப்கானிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரரை நிராகரித்தார் நடிகை அர்ஷிகான்.




 


சேர்ந்த நடிகை அர்ஷிகான், பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியாவில் செட்டிலானார். இந்தி பிக்பாஸ் 11வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாராவதாக இருந்த 'மல்லி மிஸ்து' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தி லாஸ்ட் எம்பரரர் என்ற இந்தி படத்தில் நடித்தார்.




 


இந்நிலையில் அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார். இது குறித்து கூறிய அவர், "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். ஒரு இந்தியரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.


Source - DINAMALAR

Tags:    

Similar News