10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'கலைஞர் டிவி' - சார்பட்டா'வை கைபற்றியது !

Cinema News.

Update: 2021-08-27 12:45 GMT

கடந்த பத்து வருடங்களாக புதிய படங்களை ஒளிபரப்பாமல் இருந்த கலைஞர் டி.வி மீண்டும் புதுப்படங்களை ஒளிபரப்ப துவங்கியுள்ளது.




 


ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் கோக்கேன், கலையரசன் உள்பட பலர் நடித்த சர்பட்டா பரம்பரை படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த மாதம் 22ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.




 


இப்பொழுது இந்த படம் ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் டி.வி பெற்றுள்ளது, இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. படம் வருகிற செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News