இணையத்தில் வைரலாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரபலங்களின் புகைப்படங்கள்!

இணையத்தில் வைரலாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரபலங்களின் புகைப்படங்கள்!

Update: 2021-01-29 18:12 GMT

தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்நிலையில் இந்த  படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படப்பிடிப்பில் ரவியின் மனைவி ஆர்த்தி மற்றும் பிரகாஷ்ராஜ் மனைவி போனிவர்மா ஆகியோர் தங்களுடைய குழந்தைகளுடன் வந்திருந்தனர். கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உடன் இவர்கள் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யாராயும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Similar News