போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கைது.! அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரங்கள்.!

போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கைது.! அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரங்கள்.!;

Update: 2020-10-26 17:42 GMT

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில், போதைப்பொருள் விவகாரம் அதிகமாக பரவுவதால், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பல முக்கிய புள்ளிகள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சுஷாந்த் சிங் காதலி "ரியா" அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து தீபிகா படுகோன்,சாரா அலி கான் மற்றும் முக்கிய நபர்களின் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிபிஐ.







தீபிகா படுகோன்யிடம் விசாரணை நடத்தியபோது போதை பொருள் குறித்து கைபேசியில் பேசி இருப்பதாக அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து 'சாரா அலி கான்யிடம்' போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இவர்களை அடுத்து பாலிவுட் தொலைக்காட்சியின் பிரபல நடிகை ப்ரீத்திகா சவுகான் போதைப் பொருள் வாங்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் போதைப்பொருள் விசாரணை தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளன.

போதைப்பொருள் விவாகரத்தில் அடுத்தடுத்த பல நடிகைகள் சிக்கிக் கொள்ளும் நிலையில் ரசிகர்களுக்கும் பாலிவுட் வட்டாரங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Similar News