விஜய் சேதுபதி பட நடிகை குறும்படம் இயக்கி தங்கம் வென்றார்! யார் தெரியுமா?
விஜய் சேதுபதி பட நடிகை குறும்படம் இயக்கி தங்கம் வென்றார்! யார் தெரியுமா?;
தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர்.
அதன்பின் விஜய்சேதுபதியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் ரம்மி ஒரு நல்ல நாள் பார்த்து, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர், விஜய் சேதுபதியின் அடுத்தப் படமான 'மாமனிதன்' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காயத்ரி "road to thumba" என்ற குறும்படத்தை இயக்கி முடித்துள்ளார்.மேலும் இக்குறும்படத்தை 'இந்தியன் ஃபிலிம் புராஜெக்ட்' என்ற போட்டிக்கு சமர்ப்பித்து தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.
இதனையடுத்து நடிகை காயத்ரி அடுத்த குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். இது 'மெல்ஃபோர்ன்' திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது. தாய் மகள் பாசத்தைப் பற்றியக் கதையாம்.
இவர் தங்கம் வென்றதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் கூறுவது:கொரோனா தொற்று காரணமாக எங்களால் படப்பிடிப்பு எங்குமே எடுக்க முடியவில்லை. படப்பிடிப்பை எடுக்க மிகவும் கஷ்டப்பட்டோம்
என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இக்குறும்படத்தை எடுக்க
உதவிய பணியாளர்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்திருந்தார்.
இதை அறிந்து இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.