திரௌபதி பட நடிகையுடன் கைகோர்க்கும் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு.!

திரௌபதி பட நடிகையுடன் கைகோர்க்கும் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு.!;

Update: 2020-11-02 15:09 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் யோகிபாபு. இவர் அஜித், விஜய்,ரஜினி ஆகிய முக்கிய முன்னணி நடிகர்களில் நடித்து வலம் வந்தவர். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகி பாபு நடித்து வருகின்ற "மண்டேலா" திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக திரௌபதி புகழ் 'ஷீலா ராஜ்குமார்' நடித்திருக்கின்றார்.zee tamil தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகிய தமிழ் மகள் என்ற சீரியலின் மூலமாக பிரபலமான ஷீலா ராஜ்குமார் தமிழில் டூயட் மற்றும் புகழ்பெற்ற திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார்.


தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்து இருக்கின்றார். யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்தாலும் மண்டேலா படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் மக்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தை பெறும் வகையில் இருக்கும் கூறியுள்ளார். இந்த படத்திற்கு பலரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News