இயக்குனர் ஷங்கர் மகள் 'அதிதி'யை கதாநாயகியாக்கும் முத்தையா !

Cinema News.

Update: 2021-09-06 02:15 GMT

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாகிறார்.




 


இயக்குனர் முத்தையா கார்த்தியை வைத்து 'கொம்பன்' படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் மீண்டும் 2டி எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில் கார்த்தியை வைத்து 'விருமன்' என்ற படத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். கொம்பன் படத்தில் நடித்த ராஜ்கிரணும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசை யுவன் சங்கர் ராஜா.




 


அதிதியின் முதல் போஸ்டர் நேற்று அறிமுகமாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags:    

Similar News