தளபதி 65 படத்தில் இணையும் காமெடி நடிகர்!

தளபதி 65 படத்தில் இணையும் காமெடி நடிகர்!

Update: 2021-02-01 18:30 GMT

தளபதி விஜயின் மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரிலீசாகி இரண்டே வாரங்களில் 200 கோடி வசூல் சாதனையும், தற்போது OTT-யிலும் ரிலீஸ் ஆகி அதிக வசூலையும் பெற்று வருகிறது. அந்தவகையில் மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக 'தளபதி 65' என்ற படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனவும், முக்கிய கதாபாத்திரங்கள்  ஆரம்பகட்ட பணிகள்  நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

இந்த நிலையில் தளபதி 65-ல் விஜய்யுடன் மீண்டும் யோகிபாபு நடிக்க உள்ளார். ஏற்கனவே சர்கார், மெர்சல் படத்தில் நடித்த விஜய்-யோகிபாபு காமெடி காம்போ ஒர்க் அவுட் ஆன நிலையில் தற்போது அதே போல் மீண்டும் அதே காம்போ உருவாக உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த காம்போவில் விடிவி கணேஷும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபு கேரக்டருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்திலும் அவருடைய கேரக்டருக்கு அதேபோன்ற வரவேற்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே தளபதி 65 படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் சில நாட்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News