கமல் கேட்ட கேள்வியால் திணறும் போட்டியாளர்கள்!
கமல் கேட்ட கேள்வியால் திணறும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. அந்த வகையில் இன்று வந்த இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜி காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இன்றைய 3-வது ப்ரோமோவில் ரம்யா, கேபி மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறுகிறார் என்றும் இருவர் அடுத்த வாரத்திற்கு செல்லப் போகிறார் என்றும் கமலஹாசன் கூறுகிறார்.
அப்போது சேவ் செய்யப்பட வேண்டும் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஆரி, பாலாஜி, சோம் மற்றும் ரியோவிடம் கமல்ஹாசன் கேட்கிறார். கமல்ஹாசனின் கேள்விக்கு ஆரி உள்பட யாரும் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கின்றனர். இதனை அடுத்து நான் கேள்வி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கின்றீர்கள், அதனால் நானே சொல்லி விடுகிறேன் என்று கூறி வெளியேறும் போட்டியாளரின் பெயரை கூறுவதற்கு கமல் தயாராவது போல ப்ரோமோ முடிந்தது.
இது பற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம். இந்த நிகழ்ச்சியில் யார் வெளியேறுகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil இல் இன்று.. #Day98 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/lRzKKytISy
— Vijay Television (@vijaytelevision) January 10, 2021