மோசடி மன்னனுடன் தொடர்பா? மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2022-05-14 13:15 GMT

நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் மோன்சான் மவுங்கால், ஆயுர்வேத மருத்துவரான இவர் தொல்லியல் பொருள் சேகரிப்பாளர். இவர் தனது வீட்டில் பழமை வாய்ந்த பொருட்களை கொண்ட அருங்காட்சியம் வைத்துள்ளார், திப்புசுல்தானின் கிரீடம் முதல் இயேசு அணிந்த உடை வரை தன்னிடம் இருப்பதாக கூறி பலரை நம்ப வைத்துள்ளார்.




இந்நிலையில் இவர் மீது மோசடி புகார் ஒன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் இவரைச் சார்ந்த அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மோகன்லாலுக்கு மோன்சான் மவுங்கால் உடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மோன்சானிடம் கோடிக்கணக்கில் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய அமலாக்கத்துறை மோகன்லாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறது. இதற்காக அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் மோகன்லாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Similar News