ஆலியா பட் குறித்த சர்ச்சை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ராஜமௌலி
Rajamouli about actress Alia Butt
ஆலியா பட் பற்றி தன் மனதில் உள்ளதை முதன் முறையாக பகிர்ந்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி.
சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணுடன் இணைந்து ஆலியா பட் நடித்திருந்தார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆலியா பட் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்தினால் அவருடைய சமூக வலைதள பதிவுகளில் ஆலியா பட் ஆர்.ஆர்.ஆர் படத்தை பற்றிய தகவல்களை நீக்கிவிட்டார் எனவும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு மீது கோபமாக உள்ளார் என்ற தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி. இதுகுறித்து அவர் கூறியதாவது, 'எனக்கு உண்மையில் ஆலியா பட்டை ரொம்ப பிடிக்கும், அவருடைய நடிப்பிற்கும், திறமைக்கும் அவரை மிகவும் மதிக்கிறேன் அவருடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். அவரும் நானும் நடிகையாக இயக்குனராக பணியாற்றினோம். ஆர்.ஆர்.ஆர் படத்தில் அவருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பது தெரியும். ஆனால் இரண்டு சக்திகளை ஒன்றிணைக்கும் மிக மிக முக்கிய கதாபாத்திரம் அதைத்தான் நான் அவரிடம் சொன்னேன் அவரும் கிரீன் சிக்னல் கொடுத்தார். வரும் நாட்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருக்கிறேன்' என இயக்குனர் ராஜமௌலி பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.