படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொண்ட விஜய், தோனி ! வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னையில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற கிரிக்கெட் வீரர் தோனி, விஜயை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2021-08-12 10:27 GMT

சென்னையில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற கிரிக்கெட் வீரர் தோனி, விஜயை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும், பீஸ்ட் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.


அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் செல்ல சென்னை வந்துள்ள தோனி, பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெறும் கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர படப்பிடிப்புக்காக கலந்து கொண்டார். அப்போது தோனி, விஜய்யை உற்சாகமுடன் சந்தித்து உரையாடியுள்ளனர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Facebook

https://www.puthiyathalaimurai.com/newsview/112702/Dhoni-meets-actor-Vijay-at-Gokulam-studios-beast-shooting

Tags:    

Similar News