தனுஷின் ஹாலிவுட் பட ட்ரைலர் வெளியாகிறது - ரசிகர்கள் ஆரவாரம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' இன்று ட்ரெய்லர் வெளியாகிறது.

Update: 2022-05-24 10:36 GMT

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' இன்று ட்ரெய்லர் வெளியாகிறது.



கேப்டன் அமெரிக்கா-தி வின்டர் சோல்ஜர், கேப்டன் அமெரிக்கா-சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் அந்தோணி ரூசோ, ஜோசப் ரூசோ இயக்கிய இயக்குநர்கள்தான் 'தி கிரே மேன்' படத்தின் இயக்குனர்கள்.




இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள இப்படம் 200 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் உருவாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு துவங்கிய படப்பிடிப்பு தற்போது முடிந்து படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது இத்தளத்தில் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Similar News