இயக்குனர் ஷங்கருக்கு பிடித்த 'கே.ஜி.எப் 2' - படம் பார்த்துவிட்டு என்ன கூறினார்?

'கே.ஜி.எப் 2' படத்தை இயக்குனர் ஷங்கர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

Update: 2022-05-17 13:30 GMT

'கே.ஜி.எப் 2' படத்தை இயக்குனர் ஷங்கர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.




தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ,கே.ஜி.எப் 2' திரைப்படத்தை மனம் திறந்து பாராட்டியுள்ளார். அதுபற்றி தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறப்பட்டிருப்பதாவது, 'கே.ஜி.எப் 2' படத்தை பார்த்தேன், கதை சொன்ன விதம் படத்தொகுப்பு ஆகியவை அருமை! அதிலும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடக்கும் காட்சிகளை காட்டும் இன் கட் சாட்டுக்களை பயன்படுத்தியிருப்பது துணிச்சலான முடிவு' என பதிவிட்டுள்ளார்.




மேலும் அவர் அந்த பதிவில், யஷ் மாஸாக நடித்துள்ளார், பெரியப்பா அனுபவத்தை கொடுத்ததற்காக நன்றி பிரசாந்த் நீல், இரண்டு மாஸ்டர்கள் அன்பறிவ் பங்களிப்பு அருமையாக உள்ளது' என குறிப்பிட்டார்.

Similar News