மற்ற கட்சிக்கு செல்லாதீர்கள்.. அதிருப்தி நிர்வாகிகளிடையே விஜய் திடீர் ஆலோசனை.?

மற்ற கட்சிக்கு செல்லாதீர்கள்.. அதிருப்தி நிர்வாகிகளிடையே விஜய் திடீர் ஆலோசனை.?

Update: 2020-12-20 17:12 GMT

நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என மக்கள் இயக்க அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் திடீரென ஒரு கட்சி தொடங்கினார். ஆனால் அதற்கு விஜய் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சி நடவடிக்கையையே கைவிட்டுவிட்டதாக எஸ்.ஏ.சி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், தன்னுடைய மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், ரசிகர்களை சென்னையை அடுத்த பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.

அப்போதும், ரசிகர்கள், இயக்க நிர்வாகிகள் யாரும் மாற்று கட்சியில் சேர வேண்டாம் என நிர்வாகிகளை நடிகர் விஜய் வலியுறுத்தியதாகவும் நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என ரசிகர்களிடம் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது அறிவிப்பு ஒரு வேலை கட்சி தொடங்குவாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை

Similar News