ஆர்யாவின் தங்கைக்கு லாட்டரி சீட்டில் கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
ஆர்யாவின் தங்கைக்கு லாட்டரி சீட்டில் கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரது சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக 30 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கத்தார் நாட்டில் வாழ்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கத்தார் நாட்டில் விற்கப்படும் லாட்டரி சீட்டுக்களை இந்தியர்கள் உள்பட பலரும் விருப்பத்துடன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் ஜனவரி 26-ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டின் முதல் பரிசு 15 மில்லியன் திர்காம் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 30 கோடி.
இந்த லாட்டரி குலுக்கலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசும் இந்தியர்களுக்கு தான் கிடைத்துள்ளது என்பதும் இதில் 2 பரிசை வென்ற பிரேம் என்பவர் சமீபத்தில்தான் வேலை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக ரூபாய் 30 கோடி பரிசு கிடைத்துள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.